ஒரிசா பழங்குடியினரின் ‘சந்தால்' ஓவியங்கள் - Drawing Master

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Sunday, October 04, 2015

ஒரிசா பழங்குடியினரின் ‘சந்தால்' ஓவியங்கள்

ஒரிசா மாநிலம் பழங்குடி இனத்தினரின் பல பிரிவுகளை பெருவாரியாகக் கொண்டது. அவைகளில் ‘சௌரா', ‘சந்தால்' பிரிவு மக்கள் தமது இல்லங்களின் உட்சுவற்றில் ஓவியங்கள் தீட்டுகிறார்கள். சுதந்திரமான வாழ்க்கையில் கிட்டும் மகிழ்ச்சி அவர்களது கலைகளில் வெளிப்படுகிறது. அவர்களது கலை சார்ந்த உணர்வுகளின் வெளிப்பாடு இசை, நடனம், என்றுமட்டுமல்லாமல் உடை, அணி கலன்கள், சுவர் ஓவியங்கள், மரச் செதுக்கல்கள் போன்றவை மூலமாகவும் வெளிப்படுவதைக் காணமுடிகிறது.

‘சந்தால்' ஓவியங்கள்

‘சந்தால்' பிரிவின மக்களின் அழகுணர்ச்சி அவர்களது இல்லங்களின் உட் சுவர் ஓவியங்களில் வெளிப்படுகிறது. அவை அம்மக்களின் உள்ளுணர்வு களையும், சுற்றுசூழலின் மேல் அவர்களுக்கு இருக்கும் நேசதையும், அக்கரையையும், அவர்கள் பின்பற்றிய சமய நம்பிக்கைகளையும் உள்ளடக்கிய வனவாக உள்ளன. மேலும், அவை அவர்களது கடந்த கால வரலாற்று வெளிப் பாடுகளாகவும் கூட உள்ளன.

‘சந்தால்' இனப் பெண்டிர்தான் சுவர் ஓவியங்கள் தீட்டுவார்கள். மழை காலம் முடிந்தவுடன் அவர்கள் தங்கள் இல்லங்களை சுத்தம் செய்து, மண் கொண்டு சுவர்களை பூசுவார்கள். சுவற்றில் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் வருடாந்திர அறுவடைக்கு முன்பு கொண்டாடப்படும் ‘ஷோரே' என்னும் விழாவிற்கு முன்னர் மிக நேர்த்தியான விதத்தில் பூசப்பட்ட இல்லத்தின் உட்புறச் சுவர்களில் ஓவியங்கள் படைக்கப்படும். இயற்கை சார்ந்த வண்ணங்களை தாங்களே செய்த தூரிகைகள் கொண்டு உருவங்களில் பூசுவார்கள். பல சமயங்களில் சிறு துணியும், கை விரல்களும் கூடத் தூரிகையின் தொழிலைச் செய்யும்.

ஓவியங்களில் வண்ணங்கள் சீராகவும் அடர்த்தி கொண்டதாகவும் பூசப் பட்டிருக்கும். நெளி கோடுகள் மற்றும் கோணம், நீள் சதூரம், நாற் கோணம் கொண்ட வடிவங்கள் போன்ற கணித வடிவியல்களையும் ஒவியங்களில் கலந்து அவற்றுக்கு எழிலூட்டினார்கள். அவ்வோவியங்களின் சிறப்பம்சம் அவர்கள் மலர்களையும் தாவரங்களையும் பல் வேறு நூதன வடிவங்களில் தீட்டியதுதான். புலி, யானை, பறவைகள், மீன், பாம்பு போன்றவற்றின் வடிவங்களை உருமாற்றம் செய்தும், அவர்களுடைய வாழ்வியல் முறைகளையும், தினசரி செயற்பாடு களையும், அனைவருக்குமான பொது விழாக்களையும் சித்தரித்தும் ஓவியங்கள் அமைந்தன. மத்தளம்கொட்டுவோரும், பாடல்களை இசைப்போரும், கைகோர்த்த மக்கள் வட்டமாக ஆடுவதும் அவற்றில் இடம்பெற்றன.

நாகரீக உலகுக்கு இவர்களின் ஓவியங்கள் அறிமுகமாகி அதன் கலைநயம் பற்றி பரவலாகத் தெரியத் தொடங்கிய பின் அந்த ஓவியங்களிலும் வெளி உலகின் தடம் பதிந்து விட்டது. என்றாலும், உள்ளார்ந்த கிராமங்களில் இன்னும் அவர்களது ஓவியங்கள் வெளி பாதிப்பு அற்றதாகவே உள்ளன.No comments:

Post a Comment