ஓவியர் கோபுலு - Drawing Master

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Sunday, October 04, 2015

ஓவியர் கோபுலு

கோபுலு

கோபுலு (Gopulu) என்கிற எஸ். கோபாலன் தமிழகத்தின் புகழ்பெற்ற ஓவியர்களுள் ஒருவர்.

ஓவியராதல்:
கோபாலன் தஞ்சாவூரில் பிறந்தவர். இளம் வயதில் ஓவியத்தின் மீதான ஆர்வத்தால், குடந்தை ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார். ஓவியர் மாலியின் ஓவியங்களால் கவரப்பட்டு, அவரைக் குருவாக ஏற்றுக்கொண்டார். 1941 இல் மாலியை சந்தித்து, அவரது ஆதரவில் வளர்ந்து ஓவியரானார். திருவையாறு தியாகராயரின் வீட்டில், அவர் பூசை செய்த இராமர் பட்டாபிசேகப் படத்தை அங்கிருந்தே நேரடியாக வரையச்சொன்னார் மாலி. 1942ஆம் ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் இந்த ஓவியம் இடம்பெற்றது. கோபாலனை கோபுலுவாக்கினார் மாலி

பணிகள்
1945 முதல் ஆனந்த விகடனில் முழுநேர ஓவியப் பணியின் அமர்ந்தார். தேவனின் துப்பறியும் சாம்பு சித்திரக் கதைகளுக்கும் அவரது ஏனைய புதினங்களுக்கும் ஓவியங்கள் வரைந்தார். கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள் புதினத்துக்கு ஓவியங்கள் வரைந்து உயிரூட்டினார். சாவியின் வாஷிங்டனில் திருமணம் தொடருக்கு உயிரோட்டமுள்ள கேரிகேச்சர்-களை வரைந்து புகழ்பெற்றார். எழுத்தாளர் சாவி எழுதிய பயண இலக்கியத் தொடருக்காக அவருடன் இணைந்து அஜந்தா குகைகள், எல்லோரா, தில்லி, செய்ப்பூர், மற்றும் கல்கத்தா ஆகிய இடங்களுக்கு சென்றார். இருபதாயிரம் நகைச்சுவைத் துணுக்குகளை வெளிக் கொணர்ந்துள்ளார்.
1963இல் பத்திரிக்கைத் துறையிலிருந்து விளம்பரத் துறைக்கு மாறினார். 1972 ஆம் ஆண்டில் கோபுலு ஆட் வேவ் அட்வெர்ட்டைசிங் என்ற பெயரில் சொந்த விளம்பர நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். குங்குமம் இதழுக்கும், சன் தொலைக்காட்சிக்கும் சின்னங்களை வரைந்து கொடுத்தார். பின்னர், விளம்பரத் துறையில் இருந்து விலகி, சார்பற்ற ஓவியராக கல்கி, அமுதசுரபி, ஆனந்த விகடன், குங்குமம் ஆங்கியவற்றுக்கு ஓவியங்கள் வரைந்தா

விருதுகள்
கலைமாமணி விருது (தமிழ்நாடு அரசு, நவம்பர் 26, 1991)
முரசொலி விருது
எம். ஏ. சிதம்பரம் செட்டியார் விருது
வாழ்நாள் சாதனையாளர் விருது (பகடிப்பட ஓவியர்களுக்கான இந்தியக் கழகம், பங்களூர்)
இறப்பு
இவர் 29 ஏப்ரல் 2015 அன்று சென்னையில் காலமானார்.

No comments:

Post a Comment