ஆர்ட்டிரெண்டு காலாண்டு இதழ்
சென்னையிலிருந்து 1962/April மாதம் ARTRENDS A Contemporary
art bulletin என்னும் குறிப்போடு ஆங்கிலத்தில் ஒரு இதழ் தொடங்கப்பட்டது.
இதில் edited and published by p.v.janakiraman for PROGRESSIVE PAINTER'S
ASSOCIATION, at 22, 1st cross, trustpuram, madras-24 (இது தனபால்
அவர்களின் இல்ல விலாசம்) என்ற ஆசிரியர் பற்றிய குறிப்பு இருந்தபோதிலும்
உண்மையில் இதன் பின்புலத்தில் இருந்தது அப்போது கல்லூரியின் முதல்வராக
இருந்த k.c.s. பணிக்கர்தான். ஒரு பிரதியின் விலை ஒரு ரூபாய். வெறும் 8
பக்கங்கள்தான். (a news paper folded into four sheets) வழவழவென்ற தாளில்
கருப்பு/வெள்ளை ஓவியங்கள், சிற்பங்களின் புகைப்படங்களை வெளியிட்டு
கட்டுரைகளையும் கொண்டிருந்தது. பெட்டிச் செய்திகளாக இலக்கிய ஓவியர்களின்
படைப்புக்கள் இருந்தன. வருடத்துக்கு நான்கு இதழ்கள் வந்தன. சில ஆண்டுகள்
சென்றபின் அதன் ஆசிரியர் பொறுப்பு K.V.ஹரிதாஸன் என்று காணப்படுகிறது.
ஹரிதாஸன் ஓவியர். தாந்திரிக அமைப்புக்களை தனது ஓவிய கருப்பொருளாக
அமைத்துக்கொண்டு இயங்கி வருபவர். சோழமண்டலம் ஓவியர் கிராமத்தில்
அங்கத்தினர். பிந்திய இதழ்களில் இது ஓவிய கிராமத்தைக் களமாகக் கொண்டு
இயங்கியது. The Foremost Contemporary Indian Art Journal என்னும்
குறிப்போடு சிறிது புஷ்டியாக சில விளம்பரங்களையும் கொண்டு வந்தது. அதன்
விலை ரூ.5/- ஆக உயர்த்தப்பட்டது.இருபது ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து
வந்தது
No comments:
Post a Comment