ஒரிசா பழங்குடியினரின் “சௌரா”ஓவியங்கள் - Drawing Master

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Sunday, October 04, 2015

ஒரிசா பழங்குடியினரின் “சௌரா”ஓவியங்கள்


ஒரிசா மாநிலம் பழங்குடி இனத்தினரின் பல பிரிவுகளை பெருவாரியாகக் கொண்டது. அவைகளில் ‘சௌரா', ‘சந்தால்' பிரிவு மக்கள் தமது இல்லங்களின் உட்சுவற்றில் ஓவியங்கள் தீட்டுகிறார்கள். சுதந்திரமான வாழ்க்கையில் கிட்டும் மகிழ்ச்சி அவர்களது கலைகளில் வெளிப்படுகிறது. அவர்களது கலை சார்ந்த உணர்வுகளின் வெளிப்பாடு இசை, நடனம், என்றுமட்டுமல்லாமல் உடை, அணி கலன்கள், சுவர் ஓவியங்கள், மரச் செதுக்கல்கள் போன்றவை மூலமாகவும் வெளிப்படுவதைக் காணமுடிகிறது“சௌரா”ஓவியங்கள்

தங்கள் இல்லத்து உட்சுவர்களை ஓவியங்களால் நிரப்பும் ‘சௌரா' இனத்தவர் இன்னொரு பிரிவினர். அவர்களின் ஓவியங்களில் கருப்பொருள் என்பது பெரும்பாலும் சடங்குகள் சார்ந்ததாகவும், அவர்கள் வணங்கும் கடவுளரின் உருவங்களைக் கொண்டதாகவும் இருக்கும். (‘itital') ‘இடிடால்' என்று குறிக்கப்பெறும் கடவுளர் உருவங்கள் மிகுந்த வணக்கத்துக்கும் கொண்டாட்டத்திற்குமானது. அவர்களது மதச்சடங்கிற்கு ஏற்ப அவற்றின் உருவமும் அமைப்பும் மாறுபடும். ராய்கடா, கஜபடி, கோரபுட் நிலப் பகுதிகளில் வாழும் அவர்கள் இல்லங்களில் இவ்வகை ஓவியங்கள் அதிக அளவில் தென்படு கின்றன. ‘லஞ்சியா சௌரா' பிரிவு பழங்குடியினர் இன்றளவும் தமது மரபு வழியிலேயே சுவர் ஓவியங்கள் தீட்டிவருகின்றனர். ‘சபரா', ‘சவுர்', ‘சரா', ‘சௌரா' என்று பல பெயர்களில் வாழும் இடத்துக்கு ஏற்றாற்போல அவர்கள் அழைக்கப் படுகின்றனர். மாபாரதத்து ஏகலைவனும், இராமாயணத்து சபரியும் தங்கள் இனம்தான் என்பது அவர்களது நம்பிக்கை.

அவர்களது கடவுளர் உருவங்கள் வணங்கப்படுவதற்கும், முன்னோர்களை திருப்தி செய்யவும் தீட்டப்படுபவை. சடங்குகள் நிகழும்போது பழையவை அழிக்கப்பட்டு புதிய ஓவியங்கள் தீட்டப்படும். சடங்கு சார்ந்த, நியதிகளுக்கு உட்பட்டு இருக்கும் அவற்றில் பழுதில்லாத எழிலும், கலைச்செரிவும் இருப்பதைக் காணலாம். உண்மையில் இவைதான் அவர்களது மொழியும், தத்துவமும் எனலாம். ஒவ்வொரு கடவுளரின் உருவமும் ஒரு குறிப்பிட்ட செய்தி சொல்வதற்கென்று அமையும். அவற்றின் நுணுக்கமான விவரங்கள் ஓவியத்தில் இடம் பெறும். அந்த இனமக்களின் தினசரி வாழ்க்கையையும் அவற்றில் நாம் காணமுடியும். விதை விதைக்கும் திருநாள், கடவுளரின் வழி, செழிப்பான அறுவடை, அம்மை ஒழிப்பு, இறந்தவர் கீழுலகம் சேரும் சடங்கு என்று பல வகைகளில் அவர்களது ஓவியங்களின் கருப்பொருள் அமையும். 
‘சௌரா' இனத்து மக்கள் மூங்கில் குச்சிகளை தூரிகையாகப் பயன்படுத்து கிறார்கள். விளக்கு புகையிலிருந்து கருப்பும், வெயிலில் காயவைத்துப் பொடி செய்த அரிசியை மாவாக்கி நீரில் கூழாகக் கரைத்துக்கொண்டு, அதில் வேர், மூலிகைகளிலிருந்து பெறப்படும் சாற்றை கலந்து, கிடைக்கும் வெள்ளையும் கொண்டு ஓவியங்களைத் தீட்டுகிறார்கள். இம்முறை பல காலமாகப் பின்பற்றப் பட்டு வருகிறது. பழங்குடி மக்களின் ஓவியங்களில் வண்ணம் என்பது இருப்ப தில்லை என்னும் செய்தி சிந்தனைக்குரியது. அதுபோலவே அவர்கள் வெள்ளை வண்ணம் உண்டாக்கும் முறையும் ஒன்றாக இருப்பதும் அவ்விதமான ஒன்றுதான். இந்நாட்களில் நகர்புற செல்வந்தர் தமது இல்லச் சுவர்களிலும், அலுவலகச் சுவர் களிலும் இந்த ஓவியங்களைத் தீட்டச்செய்து அலங்கரிப்பது அதிகமாகியுள்ளது. 

No comments:

Post a Comment