மாமல்லபுரம் - Drawing Master

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, May 24, 2016

மாமல்லபுரம்

மாமல்லபுரம்
பண்டைய காலத்தில் தமிழகமெங்கும் பல்வேறு மன்னராட்சிகளின் கீழ் ஒன்றோடு ஒன்று வேறுபட்ட, தனெக்கென தனி அடையாளத்தை கொண்ட மன்னராட்சிகள் தோன்றி மறைந்திருக்கின்றன. கி.மு 3 ஆம் நூற்றாண்டில் மதுரையில் வைகை நதிக்கரையில் முற்கால பாண்டியர்களின் ஆட்சி, பின் மூன்றாம் நூற்றாண்டில் காஞ்சீபுரத்தை தலைநகராக கொண்டு தோன்றிய பல்லவர் ஆட்சி, 10ஆம் நூற்றாண்டு காலத்தில் தஞ்சையில் தோன்றிய சோழ வம்சத்தினரின் ஆட்சி, பின்னர் வந்த சோழர்கள், நாயக்கர்கள் போன்ற அனைவரது ஆட்சி காலத்தின் போதுமே கலைகள் போற்றி வளர்க்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக பல்லவர்களின் ஆட்சி காலத்தில் கற் சிற்பக்கலை அதன் உச்சத்தை அடைந்திருக்கின்றது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு பல்லவர்களின் காலத்தில் மாமல்லபுரத்தில் வடிக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் கோயில்கள் இன்றும் அவர்களின் கலை மாட்சிமையை உலகுக்கு பறைசாற்றி வருகின்றன. யுனெஸ்கோ அமைப்பினால் உலக புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டு பாதுக்காப்படும்

 
மாமல்லபுரம்: தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் இருந்து 60 கி.மீ தொலைவில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி அமைந்திருக்கிறது மாமல்லபுரம் நகரம். தமிழகத்தில் இருக்கும் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றான இதன் வரலாறு கி.பி ஒன்றாம் நூற்றாண்டில் இருந்து துவங்குகிறது.
'பெரிப்லுஸ்' என்ற பழமையான கிரேக்க குறிப்பேட்டில் கி.பி 1ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் மாமல்லபுரத்தில் துறைமுகம் அமைத்து கப்பல்கள் மூலம் வாணிபர்கள் கடல் மார்கமாக தெற்காசிய நாடுகளுக்கு சென்று வர்த்தகத்தில் ஈடுபட்டதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன.
இந்த மாமல்லபுரம் நகரம் மூன்றாம் நூற்றாண்டில் தோன்றி வலுப்பெற்ற பல்லவர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. கிட்டத்தட்ட 600 வருடங்கள் பல்லவர்களின் ஆட்சியின் கீழ் இந்நகரம் இருந்திருக்கிறது.
 
 
கடற்கரை கோயில் : 
முழுக்க முழுக்க கிரானைட் கற்களை கொண்டு 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது வங்காள விரிகுடாவை பார்த்தபடி இருக்கும் மாமல்லபுரம் கடற்கரை கோயில். இந்த கோயில் தான் தென்னிந்தியாவில் இருக்கும் மிகப்பழமையான கற்கோயில் ஆகும்.
ஒரு பெரிய கோயிலையும், இரண்டு சிறிய கோயில்களையும் கொண்டுள்ள இந்த கோயில் வளாகமானது இரண்டாம் நரசிம்ம வர்மனின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. 
 
 
இங்கு மொத்தம் 7 கோயில்கள் கட்டப்பட்டதாகவும், அவை காலப்போக்கில் வெள்ளத்தாலும், கடலில் மூழ்கியும் அழிந்து போனதாக சொல்லப்படுகிறது. இங்குள்ள மூன்று கோயிலில்களில் ஒன்றில் கோயிலில் சிவ பெருமானும், மற்ற இரண்டு கோயில்களில் விஷ்ணுவும் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த கோயில் வளாகத்தில் ஒற்றைக் கல்லினால் வடிக்கப்பட்ட சிங்கத்தின் சிற்பம் ஒன்று உள்ளது. இந்த சிற்பத்தில் சிங்கத்தின் மேல் பார்வதி தேவி மகிஷாசுரமர்தினியாக அமர்ந்திருப்பது போன்று வடிக்கப்பட்டிருக்கிறது. 
 
 
பஞ்ச ரதங்கள் : 
பஞ்ச ரதங்கள் அல்லது பாண்டவ ரதங்கள் என்று அழைக்கப்படும் ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிற்பத் தொகுப்புகள் இந்தியாவில் ஒற்றைக்கல் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுகின்றன. இங்கு ஒற்றைக்கல்லில் வடிக்கப்பட்ட ஐந்து மிகப்பெரிய சிறப்பங்கள் இருக்கின்றன.
மகாபாரத்தில் வரும் பஞ்ச பாண்டவர்களையும் அவர்களின் மனைவியான திரௌபதியையும் குறிக்கும் விதமாக இந்த ஐந்து சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன. இந்த ரதங்கள் ஒவ்வொன்றும் தர்மராஜா ராஜா ரதம், பீமன் ரதம், அர்ஜுனன் ரதம், நகுல சகாதேவன் ரதம் மற்றும் திரௌபதி ரதம் என அழைக்கப்படுகின்றன.
இவை பார்பதற்கு கோயில்கள் போல தோன்றினாலும் உண்மையில் இக்கோயில் கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருக்கும் போதே பல்லவ அரசன் முதலாம் நரசிம்மவர்மன் இறந்துவிட்டதால் கட்டுமானப்பணிகள் கைவிடப்பட்டது. ஆயிரம் வருடங்கள் கடந்தும் இன்றும் கட்டிமுடிக்கப்படாமலேயே இந்த பஞ்ச ரத சிற்பங்கள் இருக்கின்றன.
 

 
வராக குகை கோயில்கள் : 
 பஞ்ச ரதங்கள் மற்றும் கடற்கரை கோயில் அமைந்திருக்கும் இடத்தில் இருந்து நான்கு கி.மீ தொலைவில் இருக்கிறது பல்லவர்களின் புகழ்பெற்ற குடைவரை கோயிலான வராக குகை கோயில்கள். மற்ற இரண்டு இடங்களை போலவே ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த குகைகள் பண்டைய கால விஸ்வகர்மா ஸ்தபதிகளின் திறமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. 
இங்குள்ள குகையில் அத்தனை தற்செயலாக தோற்றமளிக்கும் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இங்கே வராக பகவான் பூமா தேவியை தன் கொம்புகளில் தூக்கி வைத்துக்கொண்டு இருப்பது போன்ற சிற்பம் நம்மை நிச்சயம் பிரம்மிப்பில் ஆழ்த்தும். 
 
 
அர்ஜுனன் தபசு பாறை  
மாமல்லபுரத்தில் பஞ்ச ரத சிற்பங்களுக்கு அருகில் இருக்கும் 43அடி உயரம் கொண்ட திறந்தவெளி பாறை புடைப்பு சித்திரங்கள் தான் அர்ஜுனன் தபசு பாறைகள் என்று அழைக்கப்படுகின்றன. இரண்டு பகுதிகளாக இருக்கும் இந்த சித்திரங்களில் புராண கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கின்றன.  
இந்த பாறை சித்திரங்களின் ஒரு பகுதியில் அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் வேண்டி தவம் செய்யும் காட்சியும் மற்றுமொரு பகுதியில் பகீரத மன்னன் புனித நதியான கங்கையை பூமிக்கு வரவழைக்க வேண்டி தவம் செய்யும் காட்சியும் வடிக்கப்பட்டிருக்கிறது. 
 
மஹாபலிபுரம் புகைப்படங்கள் - புலிக்குகை 
 
புலிக்குகை
புலிக்குகை எனப்படும் இந்த பாறைக்குடைவு கோயில் வளாகம் மாமல்லபுரத்திற்கு சற்று வெளியே அமைந்துள்ளது. வாயிலில் புலித்தலை சிற்பங்கள் வடிக்கப்பட்டிருப்பதால் இந்த பெயர் வழங்கப்பட்டிருக்கிறது
பல்லவர் காலத்தில் 8ம் நூற்றாண்டில் இவை வடிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கடற்கரையை ஒட்டியே தனிமையான சூழலை கொண்டிருப்பதால் முக்கியமான சிற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றிருக்கும் இந்த கோயில் வளாகம் இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது.
2005ம் ஆண்டில் ஒரு கல்வெட்டு பாறை மண்ணிலிருந்து வெளிப்பட்ட பின் இப்பகுதியில் விரிவான அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு மண்ணில் புதையுண்டிருந்த புராதன சங்ககால சுப்ரமணியர் கோயிலும் இங்கு கண்டெடுக்கப்பட்டிப்பதை காணலாம். 


No comments:

Post a Comment