கார் நிறுவனங்களின் சின்னங்களும், அதன் வியக்க வைக்கும் சுவாரஸ்யங்களும்...!! - Drawing Master

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Thursday, September 15, 2016

கார் நிறுவனங்களின் சின்னங்களும், அதன் வியக்க வைக்கும் சுவாரஸ்யங்களும்...!!ஒவ்வொரு கார் நிறுவனமும் தனது பிராண்டை பிரபலப்படுத்தவும், வர்த்தகத்தில் தனி அடையாளத்தை ஏற்படுத்தவும் லோகோ எனப்படும் பிரத்யேக அடையாளச் சின்னங்களை பயன்படுத்துகின்றன.
ஆனால், அந்த அடையாளச் சின்னங்களை சம்பந்தப்பட்ட கார் நிறுவனங்கள் வடிவமைத்ததற்கான காரணங்கள் அல்லது அதன் வடிவம் ஆகியவற்றின் பின்னால் பல சுவாரஸ்யத் தகவல்கள் ஒளிந்திருக்கின்றன. 01. மெர்சிடிஸ் பென்ஸ்
உலகம் முழுவதும் பிரபல்யமான கார் நிறுவனத்தின் சின்னங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மூன்று முனை நட்சத்திர அமைப்பு கொண்ட சின்னத்தை பலர் தங்களது அந்தஸ்தாக கருதுகின்றனர்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான டெய்ம்லர் குழுமம், நீர், நிலம், ஆகாயம் என மூன்றிற்குமான மோட்டார் வாகனங்களை தயாரிப்பதை குறிப்பதற்காக மூன்று முனை கொண்ட நட்சத்திர அமைப்பு. அப்படியே பக்கத்தில் உள்ள லோகோவை பாருங்கள். ஒன்று ஆகாயத்தை குறிப்பிடும் வகையில் மேல்நோக்கியும், நிலம், நீர் ஆகியவற்றை குறிப்பிடுவதற்கு இரு முனைகள் சற்று சரிந்த நிலையில் கீழ் நோக்கியும் இருக்கின்றன.

02. ஆடி
ஆடி, ஹார்ச், டிகேடபிள்யூ மற்றும் வான்டரர் என வெவ்வேறு கார் நிறுவனங்களை இணைத்து உருவாக்கப்பட்டதுதான் ஆடி நிறுவனம். 4 நிறுவனங்களை உள்ளடக்கி, இணைந்ததை குறிப்பிடும் வகையில்தான் இந்த 4 வளையங்கள் இணைந்த லோகோ. இதில், ஆடி மற்றும் ஹார்ச் நிறுவனங்களை உருவாக்கியவர் ஆகஸ்ட் ஹார்ச். ஆட்டோமொபைல் பொறியியல் உலகின் பிதாமகன்களில் ஒருவராக இவர் குறிப்பிடப்படுகிறார்.
03. பிஎம்டபிள்யூ
ஜெர்மனியின் ஒரு மாகாணமான பவேரியாவை சேர்ந்ததுதான் பிஎம்டபிள்யூ நிறுவனம். எனவே, அந்த மாகாணத்தின் அதிகாரப்பூர்வ கொடியின் வண்ணத்தை அடிப்படையாக கொண்டதுதான் இந்த லோகோ. மேலும், பவேரிய அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ வண்ணங்களாக நீலம் மற்றும் வெள்ளை பயன்படுத்தப்படுகிறது. அதேவேளை, சக்கரங்களின் உள்ளிருக்கும் விசிறி போன்ற அமைப்பு விமான எஞ்சினை அடிப்படையாகக் கொண்டதுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ராப் மோட்டார்தான் 1917ல் பிஎம்டபிள்யூ நிறுவனமாக மாறியது. பிஎம்டபிள்யூவின் லோகோவின் சக்கர வடிவம் இந்த லோகோவை அடிப்படையாக கொண்டிருப்பதை பார்க்கலாம். 1913ல் ராப் மோட்டார்ஸ் துவங்கபப்பட்டது. பல்வேறு மாற்றங்களுக்கு பின்னர் பிஎம்டபிள்யூவாக மாறியது.

04. ஃபெராரி
கனவு பிராண்டாக இருக்கும் ஃபெராரியின் அடையாளச்சின்னத்தில் முக்கியமாக இடம்பெற்றிருப்பது துள்ளும் குதிரை சின்னம். இந்த குதிரைச்சின்னத்தின் பின்னால் ஒரு வீரனின் கதை பொதிந்திருக்கிறது.
முதலாம் உலகப் போரில் இத்தாலி நாட்டின் வீரதீரமான போர் விமான ஓட்டியாக செயல்பட்ட பராக்கா என்பவர் தனது விமானத்தின் இருபுறத்திலும் பயன்படுத்திய துள்ளும் குதிரைச் சின்னத்தையே ஃபெராரி நிறுவனர் என்ஸோ தனது நிறுவனத்தின் அடையாளச் சின்னமாக்கினார். பராக்கா விபத்தில் உயிரிழந்ததையடுத்து, அவரது வீரதீரத்திற்கு மரியாதை செலுத்தும் விதத்தில், ஃபெராரி சின்னத்தில் இருக்கும் குதிரை கருப்பு வண்ணத்தில் இருப்பதை காணலாம்.

05. ஃபோக்ஸ்வேகன்
அடையாளச்சின்னத்தை மட்டும் பார்த்து கார் வாங்குவோராக இருந்தால், அது நிச்சயம் ஃபோக்ஸ்வேகன் வாடிக்கையாளராக, ரசிகராக மட்டுமே இருக்க முடியும். இந்த சிறப்பான லோகோவை வடிவமைத்தவர் பற்றி இருமாறுபட்ட கருத்துக்கள் உலவுகின்றன. ஒருசாரார் இந்த லோகோவை போர்ஷே நிறுவனத்தின் ஊழியர் பிரான்ஸ் ஸேவர் வடிவமைத்ததாகவும், மற்றொரு சாரார் இதனை மார்ட்டின் ப்ரேயர் என்பவர் வடிவமைத்ததாகவும் கூறுகின்றனர்.
லோகோவில் இடம்பெற்றிருக்கும் நீல வண்ணம் உயர்தரத்தை குறிப்பிடுகிறதாம். வெள்ளை நிறம் தூய்மையையும், மகிழ்ச்சியையும் குறிப்பிடுகிறதாம். 1996 மற்றும் 2000ம் ஆண்டுகளில் இந்த லோகோவின் வண்ணம் மற்றும் முப்பரிமாணத்தில் மாற்றி அறிமுகம் செய்யப்பட்டது.
 
06. வால்வோ லோகோ
வால்வோவின் அடையாளச்சின்னம் ஆண் பாலினத்தை குறிக்கும் விதத்தில் இருக்கிறது. இதனை கார்ல் எரிக் பார்ஸ்பெர்க் என்ற கையெழுத்துக்கலை நிபுணர் கையால் வரைந்து உருவாக்கியதாக கூறுகின்றனர்.
வால்வோ சின்னத்தை மட்டுமின்றி, அதன் பெயரில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. வால்வோ என்றால் நகர்வு என்று பொருள்படுகிறதாம்.

07. ஜாகுவார் லோகோ
ஜாகுவாரின் பாயும் சிறுத்தை லோகோவுக்கு உலக அளவில் தனி மதிப்பும், அடையாளமும் இருக்கிறது. வேகம், வலிமை, சக்தி இவற்றை குறிப்பிடும் வகையில், பாயும் சிறுத்தை லோகோவை ஜாகுவார் பயன்படுத்துகிறது.
ஜாகுவார் சின்னத்தில் இருக்கும் கருப்பு நிறம் நேர்த்தியான வடிவமைப்பையம், உயர் செயல்திறன் மிக்கதாக குறிப்பிடுகிறது. சாம்பல் வண்ணம் மற்றும் தங்க நிறம் நிறுவனத்தின் நவீன தொழில்நுட்ப வல்லமை,கச்சிதமான டிசைன் போன்றவற்றை குறிக்கிறது.

No comments:

Post a Comment